அந்தமான் அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

உத்தரகாண்டின் தலைநகர் டேராடூன் நகரில் நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அந்தமான் அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
Published on

போர்ட்பிளேர்,

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

இதேபோன்று, நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் உத்தரகாண்டின் தலைநகர் டேராடூன் நகரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com