மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஹிங்கொலி மாவட்டம் நண்டட் கிராமத்தை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகள், கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் அண்டை நகரங்களிலும் உணரப்பட்டது. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com