ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா எனும் இடத்தில் இன்று காலை 4.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com