அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு

அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
Published on

கவுகாத்தி,

அசாமில் போங்காய்காவன் பகுதியில் இன்று மாலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் கவுகாத்தி நகரில் இருந்து மேற்கே 86 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பகுதிகளான மேகாலயா மற்றும் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com