

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று நடந்தது.
இந்த நிலையில், குஜராத்தில் சில பூத்களில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என வெளிவந்த அறிக்கைகளை குறிப்பிட்ட உமர், அதன் மீதுள்ள நம்பிக்கை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டு கொண்டார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மீதுள்ள அளவற்ற நம்பிக்கை மீது நான் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளேன். அதுபற்றிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.