மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 4-வது கட்ட வாக்குப்பதிவின்போது, துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுபற்றி அம்மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் பேசுகையில், யாராவது எல்லை மீறி சென்றால், இதேபோன்ற சம்பவம் மேலும் பல இடங்களில் நடக்கும் என்றார். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன.

இந்தநிலையில், திலீப் கோஷிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், திலீப் கோஷ், தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக தாங்கள் கருதுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

திலீப் கோஷ் தனது பேச்சுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com