

புதுடெல்லி
தாங்கள்தான் உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்றும், கட்சியின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரி, கடந்த மாதம் 25-ந் தேதி, சரத் யாதவ் தரப்பில் தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கப்பட்டது. சில ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், நிதிஷ் குமார் தரப்பில், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் கையெழுத்துகளுடன் கடந்த 8-ந் தேதி பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சரத் யாதவின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நேற்று நிராகரித்தது. போதுமான ஆவணங்கள் இல்லாததால், அவரது அணிக்கு சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும், வேண்டுமானால், கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக மனு அளிக்கலாம் என்றும் கூறியது. இத்தகவலை சரத் யாதவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, சரத் யாதவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.