பாஜக ஆட்சியை கைப்பற்றவே எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது; மம்தா பானர்ஜி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யும் வரை நாடுதழுவிய அளவில் போராட்டம் தொடரும் என்றார்.
பாஜக ஆட்சியை கைப்பற்றவே எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது; மம்தா பானர்ஜி
Published on: 

கொல்கத்தா,

பாஜக ஆட்சியை கைப்பற்றவே எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பேச்சு

மேற்குவங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சிராம்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தின் மம்தா பானர்ஜி பேசியதாவது,

தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொண்டு வாக்காளர்களின் பெயர்களை நீக்கி பாஜக ஆட்சியை கைப்பற்ற உதவியது. தேர்தல் ஆணையத்தை பாஜக எப்படி பயன்படுத்தியது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யும் வரை நாடுதழுவிய அளவில் போராட்டம் தொடரும்

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com