மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியலை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.
மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அவர்களிடம் இருந்து வரும் மேல்முறையீடுகளை விசாரிக்க 19 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள் தலைமையிலான இந்த தீர்ப்பாயங்களில் ஏராளமானோர் உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்தனர். இதில் பலரது முறையீடு ஏற்கப்பட்டு உள்ளன. எனவே அவர்களின் பெயரை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

மாநிலத்தில் வருகிற 23 மற்றும் 29-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடை பெறும் நிலையில், 21 அல்லது 27-ந்தேதிக்கு முன்பு எங்கெல்லாம் தீர்ப்பாயங்கள் மேல்முறையீடுகள் மீது முடிவு எடுக்கிறதோ, அந்த நபர்களை உள்ளடக்கி துணை வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், சிறப்பு மறுஆய்வு (SIR) செயல்முறையின் கீழ் முதல் துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நெட் செயலி அல்லது ஆணையத்தின் இணையதளம் வழியாக ஆன்லைனிலும், மாவட்ட அல்லது துணைப் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவும் மேல்முறையீடு செய்யலாம்.

பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுப்பதற்காக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com