மேற்குவங்காளம்: டிஐஜி உள்பட 12 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்குவங்காளம்: டிஐஜி உள்பட 12 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 29ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, தேர்தலை வன்முறை உள்பட எந்தவித பிரச்சினைகளும் இன்றி நடத்த தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் டிஐஜி உள்பட 12 பேரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காளத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com