ஒமைக்ரான் பரவல் எதிரொலி: ஒடிசாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு கடும் கட்டுப்பாடு

ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக ஒடிசாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் எதிரொலி: ஒடிசாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு கடும் கட்டுப்பாடு
Published on

புவனேஸ்வர்,

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஓட்டல்களில் கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலயங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரவு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. சமூக விருந்துக்கு அனுமதி இல்லை. சமூகக் கூட்டம், இசைக் குழுக்கள், நடனம் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com