காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் பள்ளிகள் மூடல்

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியாக டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் பள்ளிகள் மூடல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில், காற்று மாசு பிரச்சினை நீடித்து வருகிறது. காற்று மாசு காரணமாக கடந்த மாதம் 13-ந் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், கடந்த 29-ந் தேதிதான் மீண்டும் செயல்பட தொடங்கின. இந்தநிலையில், காற்று மாசு அதிகரித்ததால், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறியதாவது:-

காற்றின் தரம் அதிகரிக்கும் என்ற கணிப்பில் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். ஆனால், இப்போது காற்றின் தரம் மிகவும் மோசமாகி விட்டது. எனவே, மறுஉத்தரவு வரும்வரை அனைத்து பள்ளிகளும் 3-ந் தேதி (இன்று) முதல் மூடப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி வகுப்புகளுக்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. அதே சமயத்தில், பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லி கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com