பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கேரளாவில் ‘உஷார்’ நிலை

பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக, கேரளாவில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கேரளாவில் ‘உஷார்’ நிலை
Published on

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அண்டை மாநிலமான கேரளாவிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள், விமானநிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அந்த மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெகரா உத்தரவிட்டு இருக்கிறார். சந்தேகத்துக்குரிய பொருட் களை பார்த்தாலோ, சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com