நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்
Published on

புதுடெல்லி,

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. நிரவ் மோடி, லண்டன் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரது நிறுவனங்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,350 கோடி ஆகும்.

நேற்று ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு இவை வந்து சேர்ந்தன. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப்படி, இப்பொருட்கள் முறைப்படி பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com