ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நேரில் ஆஜராக சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
Published on

புதுடெல்லி

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. இதே வழக்கில், இன்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com