அனில் தேஷ்முக் மது பார்களில் இருந்து பணம் வசூலித்தது எவ்வாறு...? கண்டுபிடித்த அமலாக்கத்துறை

அனில் தேஷ்முக் மும்பை மது பார்களில் இருந்து எவ்வாறு பணம் வசூலித்தார் என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
அனில் தேஷ்முக் மது பார்களில் இருந்து பணம் வசூலித்தது எவ்வாறு...? கண்டுபிடித்த அமலாக்கத்துறை
Published on

மும்பை:

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி சச்சின்வாசி கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய பரம்வீர் சிங் உள்துறை ம்\ந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின்வாசியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்கதுறை உதிவியாளர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாயை அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும், உதவி ஆய்வாளர் சச்சின் வாசியால் சில மாதங்களில் திரட்டப்பட்டதாகவும் அமலாக்கதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பணம் மராட்டியத்திற்கு வெளியே அமைந்துள்ள சில ஷெல் நிறுவனங்கள் மூலம் தேஷ்முகுக்கு நிறுவனத்திற்கு விடப்பட்டதாக அந்த அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் தேஷ்முக்கின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com