போலி நிறுவனங்கள் மூலம் ரூ.425 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது - அமலாக்கத்துறை அதிரடி

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.425 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை மின்ட் கிளையில் 19 நிறுவனங்கள் பெயரில் கணக்கு தொடங்கி, ஹாங்காங் மற்றும் அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கு 6 மாதங்களில் ரூ.425 கோடி அளவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்திய போது, அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. மேலும் அவற்றின் உண்மையான பயனாளிகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களின் விளம்பரதாரர் இயக்குநர்கள் எனவும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், போலி நிறுவனங்கள் பெயரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் விகாஸ் கல்ரா மற்றும் சித்தாந்த் குப்தா என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவில் அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com