கல்வி என்பது சலுகை அல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி

ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான கல்விக்கு உகந்த சூழலை பெறுவதற்கான உரிமை உண்டு என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கல்வி என்பது சலுகை அல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி
Published on

நாசிக்,

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு சென்றார்.

ராகுல்காந்தி சந்திப்பு

அப்போது ராகுல்காந்தி உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் பழங்குடியின மாணவர் குழுவை சந்தித்தார்.

பழங்குடியினருக்கான ஆசிரமப் பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி யிருப்பதாவது:-

கல்வி உரிமையாகும்

நாசிக் பயணத்தின் போது பழங்குடியின மாணவர் குழுவை சந்தித்தேன். அவர்களின் பிரச்சினைகள் கவனத்துடன் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான கல்விக்கு உகந்த சூழலை பெறுவதற்கான உரிமை உண்டு.

கல்வி என்பது ஒரு சலுகை அல்ல. அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமையாகும். விளம்புநிலை சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்படக் கூடாது.

அவர்களுக்கு ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை. இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகிகள்

நாசிக் பயணத்தின் போது மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சி கொள்கைகளில் உறுதியாக நிற்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com