மத்திய மந்திரிகள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார் ராஜினாமா

மத்திய மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்திய மந்திரிகள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார் ராஜினாமா
Published on

புதுடெல்லி,

மத்திய மந்திரி சபை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் மற்றும் மாற்றம் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. 43- பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த, நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலப்பிரச்சினைய காரணம் காட்டி ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

எனினும், புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை, வேலை வாய்ப்பு நெருக்கடி போன்ற விவகாரத்தை, மந்திரி கங்வார் சரியாக கையாளாததால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு வந்திருக்கலாம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், சில மந்திரிகள் பதவி விலக இருப்பதாகவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com