

டேராடூன்,
மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 21 + ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரமேஷ் பொக்ரியால் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட போதும், பிந்தைய பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தொடரந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.