தொன்மையையும் நவீனத்தையும் ஒருங்கிணைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் - தர்மேந்திர பிரதான்

நாட்டில் உள்ள ஐஐடிகள் தரமான கல்விக்காக சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளன என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொன்மையையும் நவீனத்தையும் ஒருங்கிணைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் - தர்மேந்திர பிரதான்
Published on

மங்களூரு,

கர்நாடகாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) நடைபெற்ற 20-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சியில் நாடு முக்கிய பங்காற்றுவதுடன், 'விஸ்வ குரு' என்ற பெருமையை மீட்டெடுக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு பகுப்பாய்வு, மின்னணுவியல், மரபணு-எடிட்டிங் மற்றும் 3டி அச்சிடுதல் போன்ற துறைகளில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை, 21 ஆம் நூற்றாண்டின் தத்துவ ஆவணமாகும், இது பழங்காலத்தை நவீனத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள ஐஐடிகள் தரமான கல்விக்காக சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளன. இந்தியா, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் ஐஐடிகளை திறக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com