ஈ சாலா கப் நமதே! ஆர்.சி.பி. அணிக்கு சித்தராமையா வாழ்த்து

ஐ.பி.எல். போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் என சித்தராமையா வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
ஈ சாலா கப் நமதே! ஆர்.சி.பி. அணிக்கு சித்தராமையா வாழ்த்து
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது.

அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஐ.பி.எல். போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள்.

கனவு கடைசியில் நனவாகி உள்ளது. ஈ சாலா கப் நமதே! மின்சாரம் போன்ற செயல்பாடு முதல், கலங்காத மனவுறுதி வரை, இந்த வெற்றியானது, கர்நாடகாவின் பெருமையை கொழுந்து விட்டு எரிய செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை திகிலடைய செய்துள்ளது என பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com