

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 62 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன. மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கி வருகிறது என்று வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்தார்.