மராட்டியத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
மராட்டியத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
Published on

மும்பை,

மராட்டியத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் அன்ஷ் சமீர் சவான், 19, ரித்தேஷ், 22, ஜிதேந்திர லோகண்டே,20, ஆனந்த் ஷிங்டே, 21,நிகில், 25, மகேஷ் அனில் பவார்,25, ஆதித்யா அசோக்,21, ராஜேஷ் அசோக் கட்கர், 35 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com