

இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சர்வேட் பேருந்து நிலையம் அருகே 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்து இருந்தது. இந்த கட்டிடத்தில் எம்.எஸ். ஓட்டல் ஒன்றும் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த கட்டிடம் நேற்றிரவு 10 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியினர் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.