

சுக்மா,
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மாவில் கண்ணி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. கிஸ்தாராம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் மேலும் 6 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரது மோசமாக உள்ளது எனவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.