

யாதகிரி,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டின் ஹால் பகுதியில் 8 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். மழையின் பாதிப்பால் வீட்டின் சமையலறை சுவர் திடீரென இடிந்து குழந்தைகள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுமி துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக யாதகிரி துணை ஆணையர் ஹர்ஷல் போய்யர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பிருத்விக் சங்கர் ஆகியோர் இன்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து வடுகேரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக மழை தொடர்பான விபத்துகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.