

அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த 13-ந்தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அங்கு அவரை 10-ம் வகுப்பு மாணவன் ஒருவர் வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டார். இது குறித்து சிறுமி பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர். பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், மாணவியின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக கூறி ஏராளமான பெற்றோர் பள்ளிக்கு வெளியே திரண்டு நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளியில் 8 வயது சிறுமி 10-ம் வகுப்பு மாணவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.