14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் முதியவர் கைது

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் முதியவர் கைது
Published on

எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முளவுக்காடு பகுதியை சேர்ந்தவர் பிலிப் (வயது 73). இவர், ஆலப்புழா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆலப்புழா வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பிலிப் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கண்ணூர் நகரில் ஜி மால் சாலை பகுதியில் பிலிப் தலைமறைவாக உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், கண்ணூர் போலீசார் உதவியுடன் அங்கு சென்று பிலிப்பை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com