தமிழ்நாட்டை சேர்ந்த முதியவர் ஆந்திராவில் தற்கொலை

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த 10 ஆண்டுகளாக பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நகரி,

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஆந்திராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதியவருக்கு அறுவை சிகிச்சை

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா நல்லவனம்பேட்டையைச் சேர்ந்த மனோகரன் (வயது 73), ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த 10 ஆண்டுகளாக பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் உடல் நல பாதிப்பால் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. மேலும் மருந்து வாங்கித்தரவும், கவனித்துக் கொள்ளவும் யாரும் இல்லையென மனவேதனையில் இருந்த அவர் தாம் பணியாற்றிய கடை அருகே சம்பவத்தன்று நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, நகரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது மகன்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com