

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் சுங்கர்ஹு கிராமத்தை சேர்ந்த முதியவர் உமர் (வயது 66). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்குமுன் உயிரிழந்த நிலையில் உமர் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த 9 வயதான சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து மாயமானார். சிறுமி மாயமானது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது, மாயமான சிறுமியை முதியர் உமர் கடத்தி தனது வீட்டில் வைத்து 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த உமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.