வெள்ள பாதிப்பில் மற்றொரு சோகம்; ஹெலிகாப்டரில் இருந்து வீசிய நிவாரண பொருள் விழுந்து முதியவர் பலி

அதில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருள் ஒன்று அதனை வாங்க கூடியிருந்தவர்களின் மீது விழுந்துள்ளது.
நிவாரண பொருள்
Published on: 

சாப்ரா

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதியில், ஹெலிகாப்டரில் இருந்து வீசிய நிவாரண பொருள் விழுந்து முதியவர் பலியாகி உள்ளார்.

பீகாரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிவாரண பொருள்

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களை சுமந்து கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று சென்றுள்ளது. அப்போது, அதில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருள் ஒன்று அதனை வாங்க கூடியிருந்தவர்களின் மீது விழுந்துள்ளது.

இதில், 58 வயது முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்து உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதனை காவல் அதிகாரி சவீந்திர குமார் கூறினார்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினார். மற்றொரு சம்பவத்தில், ஹெலிகாப்டர் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றபோது, அதன் வேகத்தில் கூடாரம் ஒன்றின் மேற்கூரை பெயர்ந்து, பறந்து விழுந்தது. இதில் பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது என்று காவல் அதிகாரி விம்லேஷ் குமார் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com