சாப்பிடும்போது தவறுதலாக மட்டன் எலும்பை விழுங்கிய முதியவர்... வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

தெலங்கானாவில் 66 வயது முதியவரின் உணவுக் குழாயில் சிக்கிய மட்டன் எலும்பை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.
சாப்பிடும்போது தவறுதலாக மட்டன் எலும்பை விழுங்கிய முதியவர்... வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்
Published on

யாதாத்ரி புவனகிரி,

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள கக்கிரேணி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீராமுலு (66 வயது). இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மட்டன் சாப்பிட்டுள்ளார். அப்போது கவனக் குறைவாக 3.5 சென்டிமீட்டர் நீளமுள்ள எலும்பை விழுங்கியுள்ளார்.

இதன் விளைவாக ஒரு மாதத்திற்கும் மேலாக உணவுக்குழாயில் புண்கள் உட்பட கடுமையான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது, உணவுக் குழாயில் எலும்பு சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த எலும்புத் துண்டை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது அவர் நலமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com