கவிதாவின் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல்

தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப செயல்படுவோம் என கவிதா கூறியுள்ளார்.
கவிதாவின் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும். பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கடந்த 25-ந் தேதி. தெலுங்கானா ராஷ்டிர சேனா என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இதற்கிடையே, தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்காக அவரது சார்பில் 5 பெயர்கள் தேர்தல் கமிஷன் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.

அவற்றில். 'தெலுங்கானா ரக்ஷண சேனா' என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.

இத்தகவலை கவிதா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்தார். அதில், தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com