

சென்னை,
முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வா பழனிசாமி தொடர்பாக நீலகிரி மக்களவை உறுப்பினா ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாகள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாகள் தொடாபாக அறிக்கை தர தோதல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தோதல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நாளை ( 31 ஆம் தேதி) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.