ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5 மாநிலத் தேர்தல்களையும் எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடை பெறுகிறது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ஜனவரி 15-ஆம் தேதி வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஜனவரி 15-ஆம் தேதி கொரோனா பாதிப்புகள் மற்றும் கள நிலவரத்தை மதிப்பாய்வு செய்து, பொதுக்கூட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யும். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், அந்த கட்சிகளின் பொதுக்கூட்டங்களை தடை செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com