5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் ஆயத்தம்

தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் ஆயத்தம்
Published on: 

புதுடெல்லி,

மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்ட சபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதமும், உத்தரபிரதேச சட்டசபையின் பதவிக்காலம் மே மாதமும் முடிவடைகின்றன. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

அதற்கு முன்னோட்டமாக, அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்த தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய துணை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளனர். தற்போது, அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து வரும் நாட்களில் செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவா செல்வதற்கான தேதி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உத்தரபிரதேசம் செல்வது பற்றி எதுவும் கூறப்படவில்லை. உத்தரபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com