வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை


வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
x

பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தசூழலில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்களது மாநிலங்களில் உள்ள மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர்பட்டியல் திருத்தம் நடைபெற்றது ஆகிய தகவல்களை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைதேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். முன்னதாக பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைதேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், 65 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story