

புதுடெல்லி,
கேரளாவில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள இடதுசாரி கூட்டணி வரும் தேர்தலில் வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேநேரத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் கூட இல்லாத நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சட்டசபை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் பிற தலைவர்களை சந்தித்தார். அப்போது கேரளாவின் பாரம்பரிய உணவுகளான அப்பம், புட்டு மற்றும் ஆம்லெட் சாப்பிட்டு கொண்டே, மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கள நிலவரம் குறித்து அவர்கள் பேசினர்.
இந்த சந்திப்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி முறை மாற்றம் மற்றும் முதியோர் நலன் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் யுடிஎப் கூட்டணியின் வியூகங்களை வகுப்பதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்வதற்கும் இந்த திட்டமிடப்படாத சந்திப்பு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தாக தெரிவித்தார்.
கேரள மக்களின் புதிய நம்பிக்கையாக யுடிஎப் உள்ளது மேலும் எங்களது அணி வலுவாகவும், ஒருமித்த கருத்தோடும் இருப்பதாக ராகுல் தெரிவித்தார்.