மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது
மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

சென்னை,

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தெகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தெகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தெகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

எனவே இன்று 12 மாநிலங்களில் உள்ள 95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அவை விவரம் வருமாறு:-தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com