நெருங்கும் தேர்தல்...உட்கட்சி பூசல்களை தவிர்க்க தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை

அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெருங்கும் தேர்தல்...உட்கட்சி பூசல்களை தவிர்க்க தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி கிருஷ்ணா மேனன் சாலையில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் உட்கட்சி பூசல்களை களைவது எப்படி?, 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம், தொகுதி பங்கீடு, தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது? அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் , தமிழக பாஜக நிர்வாகிகளுக்குஅமித் ஷா அறிவுரை வழங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது ,

தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது என்றார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com