தமிழகம், கேரளா உள்பட 5 மாநில தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்திற்கு 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும்.

தமிழகம், கேரளா உள்பட 5 மாநில தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி

நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்து உள்ளது.

இதில், கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

Also Read
பெல்ஜியம் நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணம்

தமிழகம், கேரளா உள்பட 5 மாநில தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் (294 தொகுதிகள்) 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று தமிழகத்திற்கு (234 தொகுதிகள்) 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

இதில், மே மாதம் 10-ந் தேதியுடன் தமிழக அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோன்று, ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி, மே 7-ந்தேதி மேற்கு வங்காளம் மே 20-ந்தேதி அசாம், மே 23-ந்தேதி கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. மேற்கு வங்காளம் தவிர பிற 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதேபோன்று, அனைத்து 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் (மே 4-ந்தேதி) நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com