பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு
Published on

லாகூர்,

ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. 53 சட்டசபை இடங்களில் 45 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 8 இடங்கள் நியமன அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான ஜனாதிபதி, பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்தல்

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. 30ம் தேதி வரை வேட்புமனுக்கள் திரும்பப்பெறலாம். அடுத்த மாதம் 2ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com