பிரசாரம் ஓய்ந்தது: டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வந்தது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறந்தது.
இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சூறாவளி பிரசாரம் செய்தனர். பிரசாரம் ஓய்ந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேற உத்தரவிட்டப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணி உள்ளிட்டவை தொடங்கியுள்ளன. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.






