மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

தார்வார் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.
மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
Published on

உப்பள்ளி;

தார்வார் தாலுகா திகதி கிராம பகுதியை சேர்ந்தவன் சுரஷ் கஞ்சநல்லி (வயது 17). இவன் நேற்று முன்தினம் மாடுகளுக்கு தீவனத்திற்காக புல் அறுக்க தோட்டத்திற்கு சென்று இருந்தான். பின்னர், புல் அறுத்து விட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதை பாக்காத சுரேஷ் மின்வயர் மீது மிதித்து உள்ளான். அப்போது அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இந்த நிலையில் சுரேஷ் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர், தோட்டத்திற்கு சென்று தேடிபார்த்தனர். அங்கு சுரேஷ் மின்சாரம் பயந்து இறந்து கிடப்பதை கண்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தார்வா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com