வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு..!

வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 77 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 77 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த 28-ந்தேதி மின்சார பயன்பாடு மிக மிக அதிகமாக இதுவரை இல்லாத அளவில் இருந்ததாக மின் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அரியானாவில் 28-ந்தேதி ஒரே நாளில் 77 ஆயிரத்து 91 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 737 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தானில் 15 ஆயிரத்து 850 மெகா வாட்டும் பஞ்சாப்பில் 14 ஆயிரத்து 2 மெகா வாட்டும் அரியானாவில் 12 ஆயிரத்து 540 மெகா வாட்டும் டெல்லியில் 7 ஆயிரத்து528 மெகா வாட்டும் மின்சாரத்தேவை இருந்துள்ளது. முந்தைய நாளான 27-ந்தேதி கிழக்கு மண்டலத்தில் 26 ஆயிரத்து 92 மெகா வாட் அளவுக்கு மின்தேவை ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com