ஜம்மு-காஷ்மீரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 11 பேர் பலி

நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்ததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 11 பேர் பலி
Published on

ஜம்மு

ஜம்மு-காஷ்மீரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுதவிர பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

நிலச்சரிவு

இவர்களில் பூஞ்ச் மாவட்டத்தின் லோரன் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இதேபோன்று, தோடா மாவட்டத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பாறை உருண்டு பஸ் மீது விழுந்ததில், 2 பேர் பலியானார்கள். கல் தாக்கியதில் பெண் ஒருவரும், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு நபர் ஒருவரும் பலியானார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com