டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடந்து உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை, அதுபோல் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது

குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறினார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com