இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை - ராமர் கோவில் பணிகள் ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை - ராமர் கோவில் பணிகள் ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இரு தரப்பினருக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த பிரச்சினையின் மையப்பகுதியாக விளங்கி வந்த, உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி இடத்தின் உரிமை தொடர்பாக இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக் கட்டளை ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதேநேரம் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக நகரின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக இந்த தீர்ப்பை வெளியிட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பால் நீண்டகால பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என அனைத்து பிரிவினரும் அறிவித்து உள்ளனர். மேலும் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இந்த வழக்கின் மனுதாரர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்பதாக அறிவித்து இருந்தனர்.

இந்த தீர்ப்புக்குப்பின் நாட்டில் அமைதியை பராமரிப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாபா ராம்தேவ், மவுலானா எம்.மதானி, அவ்தேசானந்த் கிரி, சுவாமி பரமாத்மானந்தா மற்றும் ஏராளமான மத தலைவர்களும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com