

புதுடெல்லி,
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினராக பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1ந்தேதியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இதில் பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், ஆசிமா கோயல் மற்றும் சமிகா ரவி ஆகியோர் மற்ற பகுதிநேர உறுப்பினர்கள் ஆவர்.